சினிமா

பூமியில் தோன்றிய வெள்ளை நிலா.. உருகவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ஹன்சிகாவின் வெள்ளை நிற உடையில் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படம் இணையத்தளத்தில்

நடிகை ஹன்சிகாவின் வெள்ளை நிற உடையில் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து,  உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும், கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுதுறுப்பான நடிப்பிற்கும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவரை ரசிகர்கள் குட்டி குஷ்பூ என்றே அழைத்துவந்தனர்.

ஆனால் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார் ஹன்ஷிகா. மேலும் பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அம்மணி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர், வெள்ளை உடையில் ரசிகர்களை உருக வைக்கும் அளவிற்கு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணிக்கும் அளவுக்கு உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பூமியில் தோன்றிய வெள்ளை நிலா என ஹன்ஷிகாவின் அழகை வர்ணித்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...


Advertisement