அடக்கொடுமையே! நாதஸ்வரம் நடிகைக்கு இப்படியொரு பிரச்சினையா? அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடக்கொடுமையே! நாதஸ்வரம் நடிகைக்கு இப்படியொரு பிரச்சினையா? அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!


actress geethanjali have some problems in acting

 பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கீதாஞ்சலி. இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இந்நிலையில் நாதஸ்வரம் படப்பிடிப்பு காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடந்து வந்த நிலையில் அவர் வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். 

 அந்த தொடர் நிறைவடைந்த நிலையில் அவருக்கு ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வரத் துவங்கியது. மேலும் நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து கீதாஞ்சலி வாணி ராணி,  நிறம் மாறாத பூக்கள்,  ராஜா ராணி,  கல்யாண வீடு  போன்ற பல தொடர்களில் நடித்தார். மேலும் அதற்காக அவர் தனது தாயுடன் சென்னை வளசரவாக்கம் பகுதியில் குடியேறினார்.

Geethanjali

இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிக்க வேண்டிய நிலையில், ஷூட்டிங் நாட்களை ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அவர் ஒரு சில தொடர்களில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் சென்னையை காலி செய்து மீண்டும் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில், பிரபலமான நடிகைகள் இரு சீரியலில் நடிக்கும் பொழுது எந்த பிரச்சினையும் வராது. ஆனால் என்னைப் போன்ற புதுமுகங்கள் நடிக்கும்பொழுது கால்ஷீட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றனர். மேலும் ஒரு தொடரை வைத்துக்கொண்டு சென்னையில் காலம் ஓட்டுவது என்பது முடியாது என கூறியுள்ளார்.. மேலும் உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக என கேட்ட நிலையில், ஆமாம் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மார்கழி முடிந்ததும் திருமண வேலைகள் ஆரம்பமாகும் என கூறியுள்ளார்.