அடேங்கப்பா! விஜய் சேதுபதி பட நடிகைக்குள் இவ்வளவு திறமையா? ஆச்சரியத்தில் வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி குறும்படத்தை இயக்கி, அதற்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


Actress gayathri award winning for short flim

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. அதனைத் தொடர்ந்து அவர் ரம்மி, ஒரு நல்லநாள் பார்த்து, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியின் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காயத்ரி Road to thumba என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த குறும்படத்தை ஃபிலிம் ப்ராஜெக்ட் என்ற போட்டிக்கு சமர்ப்பித்த நிலையில், அதற்காக அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

gayathri

இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காயத்ரி தான் இயக்கி, நடித்த மற்றொரு குறும்படத்தை மெல்போர்ன் திரைப்பட விருது விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.