வாவ்.. செம கியூட்!! அப்படியே அம்மாவை மாதிரியே இருக்காரே! நடிகை பரினாவின் மகனை பார்த்தீர்களா!

வாவ்.. செம கியூட்!! அப்படியே அம்மாவை மாதிரியே இருக்காரே! நடிகை பரினாவின் மகனை பார்த்தீர்களா!


Actress farina son photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான தொடர்கள் ரசிகர்களை  பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இத்தொடரில் கொடூர வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரினா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரினா தற்போது தனது மகனுடன் அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் குழந்தை பரினாவை போலவே கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.