சினிமா

ராதிகாவுடன் மறுபடியும் இணைந்த நடிகை தேவிப்பிரியா!! ரசிகர்கள் உற்சாகம்!!

Summary:

actress devipriya with Rathika


தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். 

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான்.

          

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில்  டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி' படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இந்த நிலையில் சன் டிவிக்காக, ராடான் மீடியா தயாரிக்கும் சந்திரகுமாரி எனும் பிரமாண்ட தொடரில் மறுபடியும் ராதிகாவுடன் இணைந்துள்ளார். அந்த சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை தேவிப்பிரியா புதிதாக வந்துள்ளார். இவர் வந்த பிறகும் தொடர் மேலும் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement