சினிமா

நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

Summary:

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி பின்னர் சில சீரியல்கள

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி பின்னர் சில சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏரளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். 

இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் அதற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்குக் காரணம் அவரது கணவர் ஹேமந்த்தான் எனவும், அவர் சித்ரா டிவி தொடர்களில் நடிக்க கூடாது என வற்புறுத்தியதாக, அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டு துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில், ஹேமந்த் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நிராகரிக்கப்பட்டது.

chitra with husbandக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஹேமந்த்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்ந்து 60 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஹேமந்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நடிகை சித்ராவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement