சினிமா

இப்படி ஒரு போஸ்ட் போடுவீங்கன்னு நினைக்கல.. அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..

Summary:

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு அலைபாயுதே ஸ்டையிலில் கமெண்ட் செய்துள்ளார் ரசிகர் ஒருவர்.

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு அலைபாயுதே ஸ்டையிலில் கமெண்ட் செய்துள்ளார் ரசிகர் ஒருவர்.

காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்தை அடுத்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக நாடோடிகள் 2 படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அதுல்யா.

நாடோடிகள் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. தற்போது வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துவருகிறார். சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் அம்மணி.

தனது புது புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர் ஒருவர், "நீங்க இப்படி போஸ்ட் போடுவீங்கன்னு நான் நினைக்கல, அதை நான் பார்ப்பேன்னு நினைக்கல..." என அலைபாயுதே ஸ்டையிலில் கமெண்ட் செய்ய தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.

 


Advertisement