"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
வாவ்!! நடிகை அசினின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாரா?? வைரலாகும் புகைப்படங்கள்..
நடிகை அசினுடைய மகள் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் அசின். விஜய், அஜித், சூர்யா என அனைத்து தமிழ் பிரபலன்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர், பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்ட அசின் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்திவருகிறார்.
அசினுக்கு 4 வயதில் அரின் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவந்தநிலையில், தற்போது அரின் சற்று வளர்ந்துவிட்ட புகைப்படங்களை அசின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அசின் மகள் இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரா என கமெண்ட் செய்துவருகின்றனர்.