அந்த நடிகையைப் பற்றி துண்டு பேப்பரில் எழுதிக் கொடுத்த பாலு மகேந்திரா.! இப்படியா எழுதியிருந்தாரு.?

அந்த நடிகையைப் பற்றி துண்டு பேப்பரில் எழுதிக் கொடுத்த பாலு மகேந்திரா.! இப்படியா எழுதியிருந்தாரு.?


actress-archana-shares-about-her-memories-with-ace-film

தென் இந்திய சினிமாவில் மூத்த நடிகைக இருப்பவர் அர்ச்சனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்ற நடிகை ஆவார. வீடு என்ற தமிழ் திரைப்படத்திற்காகவும் தாசி என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும் தேசிய விருதுகளை பெற்றவர்.

இயக்குனர் பாலு மகேந்திரா இவருடைய திறமையை கண்டறிந்து இதுவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திராவின் நினைவு தினப் பேட்டி ஒன்றில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் அர்ச்சனா.

Archana

சினிமாவிற்கு தகுதியே இல்லாதவள் நான் என  சில படங்களில் இருந்து என்னை ஒதுக்கிய போது பாலுமகேந்திராவை சந்தித்தேன் அவர் தான் என்னை புகைப்படம் எடுத்து தன்னுடைய படத்தில் நடிக்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்திருக்கிறார்.

மேலும்  அர்ச்சனா பாலுமகேந்திரா படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்  இவரை ஏன் உங்கள் படங்களில் நடிக்க வைக்கிறீர்கள்.? ஏற்கனவே இரண்டு மூன்று படங்களில் இருந்து இவரை நீக்கி இருக்கிறார்கள் என பாலுமகேந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.

Archana

இப்போது பாலுமகேந்திரா அவரிடமிருந்து ஒரு காகிதத்தை வாங்கி இந்த நடிகை இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான கதாநாயகியாக இருப்பார் தேசிய விருதுகளையும் வாங்குவார் என எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுபோலவே நான் இரண்டு தேசிய விருதுகளை வாங்கினேன் என பானுமகேந்திராவுடனான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.