ப்பா.. இவருக்குள் இப்படியொரு திறமையா! ஒவ்வொன்னும் வேற லெவல்! நடிகை அனுபமா பகிர்ந்த அசத்தல் வீடியோவை பார்த்தீங்களா!!

ப்பா.. இவருக்குள் இப்படியொரு திறமையா! ஒவ்வொன்னும் வேற லெவல்! நடிகை அனுபமா பகிர்ந்த அசத்தல் வீடியோவை பார்த்தீங்களா!!


actress-anupama-drawing-video-viral

மலையாள சினிமாவில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் அவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் தனது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். நடிகை அனுபமா தற்போது பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் கமிட்டாகி  நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தான் வரைந்த ஓவியங்களின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட பலரும் இவருக்குள் இப்படியொரு திறமையா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.