அடடே.. இளைஞர்களின் கனவு நாயகிக்கு இரண்டாவது அழகிய பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடடே.. இளைஞர்களின் கனவு நாயகிக்கு இரண்டாவது அழகிய பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!



Actress Anjali Nair 2nd Cute Girl baby

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, இதுவும் கடந்து போகும், அண்ணாத்த, மாமனிதன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது வரை 125 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 

கடந்த 2011ம் ஆண்டு அனீஸ் உபசான் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் அவரை விவாகரத்து செய்த அஞ்சலி நாயர், தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார். 

அதனைத்தொடர்ந்து, இணை இயக்குனரான அஜித் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலி நாயகருக்கு, அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்த புகைப்படத்தை நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த நிலையில், அது வைரலாகி வருகிறது. மேலும், வாழ்த்துக்களும் குவிகின்றன.