முகமெல்லாம் வீங்கி பலத்த காயத்துடன் பிரபல நடிகை.! முன்னாள் காதலனின் கொடூரம்.! நடந்தது என்ன??actress-anika-vikraman-shares-her-ex-lover-attacking-im

தென்னிந்திய நடிகை அனிகா விக்ரமன் தனது முன்னாள் காதலன் தன்னை உடலளவில் கடுமையாக தாக்கியதாகவும், மனரீதியாக சித்ரவதை செய்ததாகவும்  சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தாக்கியதால் முகமெல்லாம் வீங்கி பலத்த காயத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், அனூப் பிள்ளை என்பவரை நான் காதலித்தேன். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே என்னை மிகவும் துன்புறுத்தி வந்தார். முதல்முறை அவர் என்னை சென்னையில் வைத்து மோசமாக அடித்தார். பின்னர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கெஞ்சியதால் நான் மீண்டும் அவரை ஏற்றுக் கொண்டேன்.

பின்னர் இரண்டாவது முறை பெங்களூரில் வைத்து என்னை அடித்தார். நான் போலீசில் புகார் அளித்தேன். அவர் பணம் கொடுத்து போலீசை சமாளித்தார். அந்த தைரியத்தில் என்னை கடுமையாக தாக்கி வந்தார். நான் அவரை விட்டு விலக முயன்றாலும் என்னை விட அவர் விரும்பவில்லை. எனது போனை உடைத்தார். எனக்கு வரும் அனைத்து மெசேஜையும் படித்தார்.

Anika vikraman

நான் படப்பிடிப்புக்கு கிளம்பி செல்ல தயாரான போது , எனது மேலே ஏறி அமர்ந்து என் முகத்தில் சரமாரியாக தாக்கினார் என கூறியுள்ளார். மேலும் முகமெல்லாம் வீங்கி பலத்த காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவாகியுள்ள அவரது காதலரை தேடி வருகின்றனர்.