அட.. குட்டி நயன் கலக்குறாரே! ஸ்டைலாக அவர் போடும் ஆட்டத்தை பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!

அட.. குட்டி நயன் கலக்குறாரே! ஸ்டைலாக அவர் போடும் ஆட்டத்தை பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!


actress-anika-dance-video-viral

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா. இவர் தமிழில் இயக்குனர் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து பெருமளவில் பிரபலமானார். அவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான, ஹீரோயின்களுக்கு இணையாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் குட்டிநயன் கலக்குறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.