தமிழகம் சினிமா Covid-19

ஆண்ட்ரியா உடல்நிலை!! பிரபல தமிழ் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!! வீட்டில் தனிமை..

Summary:

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்ப

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் கொரோனாவால் அன்றாடம் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அதேபோல் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றுகூட பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.


Advertisement