"என்னுடைய நாளை அழகாக்கிய தோழி" - ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து பதிவிட்டுள்ள ரோஜா.!

"என்னுடைய நாளை அழகாக்கிய தோழி" - ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து பதிவிட்டுள்ள ரோஜா.!


actress-and-minister-roja-penned-an-emotional-tweet-aft-B8G94H

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை  திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். ஆந்திராவில் சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையின் அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நீலாம்பரி ஆக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலின் மூலம் ரசிகர்களால்  கொண்டாடப்பட்ட இவர் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களால்  என்றும் மறக்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர். இவரும் திருமணம் முடிந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

Kollywoodசில நாட்களுக்கு முன்பு நடிகை ரோஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கும் நிலையில் அவரது நெருங்கிய தோழியான ரம்யா கிருஷ்ணன் அவரை சென்று சந்தித்து இருக்கிறார்.

இதனை மன மகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரோஜா " நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் என்றும் நீங்கள் அவர்களை பார்க்க மாட்டீர்கள் ஆனால் அவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்றும் பதிவிட்டு இருக்கிறார். இன்று என்னை சந்தித்து என்னுடைய நாளை அழகாக மாற்றிய எனது தோழியை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி" எனவும் பதிவிட்டு இருக்கிறார்.