இதெல்லாம் நல்லாவா இருக்கு! ஏடாகூடமாக ஆசைப்பட்ட ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை! என்ன தெரியுமா?

இதெல்லாம் நல்லாவா இருக்கு! ஏடாகூடமாக ஆசைப்பட்ட ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை! என்ன தெரியுமா?


actress-anaikaa-chotti-advised-to-his-fan

தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த காவியத்தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனைகா சோட்டி. அதனை தொடர்ந்து அவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ, சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகை அனைகா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர். 

இந்நிலையில் அவர் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் ஈடுபட்டு ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது நெட்டிசன் ஒருவர் நாற்காலி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு, நான் உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நாற்காலியாக மாற விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

anaika

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்து அனைகா ,உங்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உங்களை டாக்டராக, இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் 200 ரூபாய் சேராய் இருக்க ஆசைப்படுகிறீர்கள், இதெல்லாம் நல்லாவா இருக்கிறது, ஒழுங்காக நன்கு படித்து முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் அனைகாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.