தனது கர்ப்பத்தை அறிவித்த நடிகை அமலா பால்... ரசிகர்கள் வாழ்த்து!!

தனது கர்ப்பத்தை அறிவித்த நடிகை அமலா பால்... ரசிகர்கள் வாழ்த்து!!



Actress Amala paul announced her pregnancy news

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தனது முதல் படத்திலேயே ஏராளமான சர்ச்சைகளை சந்தித்த அவர் பின்னர் மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அமலா பாலுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தநிலையில் அவர் தெய்வ திருமகள், வேட்டை, தலைவா என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஒரு சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு நடிகை அமலாபால் தாறுமாறாக கிளாமரில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் தெரிவித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.