விஜய், அஜித் - முதன் முறையாக கருது கூறிய பிரபல நடிகை. என்ன சொன்னார் தெரியுமா?



Actress aliya manasa talks about thala ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் அஜித் மற்றும் விஜய். தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பல நடிகைகள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். 

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானஸா, நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Latest tamil news

இந்த தொடரில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மானஸா. இவர்  இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் அணைத்து இளைஞர்கள் மத்தியிலும் படு பேமஸ் ஆகிவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆலியா நடிகர் அஜித் பற்றி கூறிய போது “அஜித் இந்த வயசுலயும் ஹிரோவாக கெத்து காட்டி வருகிறார்.

அதிலும் அவரது சால்ட் & பெப்பர் லுக் மிகவும் அசத்தலாக உள்ளது .”என்று கூறியுள்ளார். மேலும், விஜய் பற்றி மானஸா கூறுகையில் “எத்தனை பேர் வந்தாலும் இவரின் க்யூட் சிரிப்பையும், அவரின் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியுள்ளார் நம்ம செண்பா.

Latest tamil news