பேட்டியில் திமிராக பேசிய நடிகை அபிராமி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?actress-abirami-recent-interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அபிராமி. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் அபிராமி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்.

abirami

மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டினார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் அபிராமி. ஆனால் இந்நிகழ்ச்சியில் நெகட்டிவான விமர்சனங்களையே பெற்றார். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

abirami

இந்நிலையில், சமீபத்தில் யூ டியூப் சேனலில் பேட்டியில் கலந்து கொண்ட அபிராமியின் ஆடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அபிராமி "நான் எப்படி வேணாலும் டிரஸ் போடுவேன். பாக்குறவன் பாரு பிடிக்கலன்னா பார்க்காத" என்று திமிராக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.