பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
"பதினைந்து வயதில் என்னுடைய முதல் முத்தம் அவர் கூட தான்" மனம் திறந்த கமல் பட நடிகை அபிராமி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சினிமா வாழ்க்கையில் சந்தித்து இருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களை சவால்களாக ஏற்று நடிக்கும் கதாநாயகன் கமலஹாசன். அந்த வரிசையில் கிராமத்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'விருமாண்டி' இப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.
மேலும் விருமாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக அபிராமி நடித்திருப்பார். இவரின் கதாபாத்திரம் பாராட்டப்பட்டு அதிகம் பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் கலந்து கொண்டுள்ள பேட்டியில் அபிராமி முதல் முத்தத்தை குறித்து பேசியிருந்தார். அவர் கூறியதாவது, "எனக்கு முதல் முத்தம் என்பது 15 வயதில் நடந்தது. திரைப்படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பது எனக்கு பெரிதான விஷயமாக தெரியவில்லை. தேவைப்பட்டால் முத்த காட்சியில் நடிப்பது தவறு இல்லை" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.