அட..சூப்பர்! இப்படியொரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி! வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!Actreaa anjali fall first look poster released

தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

நடிகை அஞ்சலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில்  'ஃபால்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" என்ற கனடிய வெப் தொடரின் ரீமேக் ஆகும்.

இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், பூர்ணிமா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப்தொடர் இளம்பெண் ஒருவர் மறந்து போன தனது நினைவுகளை மீட்டு மீண்டும் ஞாபகப்படுத்த முயல்வதை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது.  இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில்  வைரலாகி வருகிறது.