வாவ்.. நடிகர் நகுலின் மகளா இது!வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

வாவ்.. நடிகர் நகுலின் மகளா இது!வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!


actre-nakul-daughters-latest-photo

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான "காதலில் விழுந்தேன்" திரைப்படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அப்படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்கா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செம வைரலானது.

அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தற்போது எரியும் கண்ணாடி, வாசக்கோட காமா படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக  பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nakul

நடிகர் நகுல் ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு அகிரா என பெயர் வைத்துள்ளனர்.இந்நிலையில் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் நகுலின் மகளா இது!நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.