மக்களுக்கு கொரோனா பயம் போகணும்னா, நடிகர்கள் இதைதான் செய்யணும்! தியேட்டர் அதிபர் கொடுத்த ஐடியா!

மக்களுக்கு கொரோனா பயத்தை போக்க நடிகர்கள் தியேட்டர்களில் அவர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


actors-should-watch-movie-in-theatre-with-people-to-red

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் பரவி பெருமளவில் கோர தாண்டவமாடியது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

மேலும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், பல பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்துவதற்கு மட்டும் அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை இந்த நிலையில் கொரோனோவின் தாக்கம் குறைந்து வரும்நிலையில், தியேட்டர் அதிபர்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

theatre

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்  செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையரங்குகள் திறப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர், பொதுமக்களுக்கு கொரோனோ பரவல் குறித்த அச்சத்தைப் போக்க, நடிகர்கள் அவர்களுடன் அமர்ந்து தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.