நடிகர் விவேக் பிறந்து வளர்ந்த பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!Actor Vivek old house image viral

90களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விவேக். இவர் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் காமெடிகள் அனைத்தும் சமூக விழிப்புணர்வு தூண்டும் விதமாக இருக்கும்.

நடிகர் விவேக் அப்துல்கலாம் மீது கொண்ட பற்றின் காரணமாக லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

vivek

இந்நிலையில் தற்போது நடிகர் விவேக் பிறந்து வளர்ந்த அவரின் பழைய வீட்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட நடிகர் விவேக் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் சென்னை வந்த விவேக் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ஆனால், விவேக் பிறந்து வளர்ந்த அவருடைய சொந்த வீடு கோவில்பட்டியில் தான் உள்ளது. அந்த வீடு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது அந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.