சினிமா

நடிகர் விவேக் படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது...! ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Summary:

actor-vivek-movie-censor-release

நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் "எழுமின்". இந்த படம் 
வி.பி.விஜி இயக்கத்தில் வருகிறது. நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருக்கிறார்.  வையம் மீடியாஸ் வழங்கும் இப்படத்தில் மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதையை சுருக்கமாக சொல்ல போனால் தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கோபி ஜெகதீஸ்வரன், மற்றும் இசையமைப்பாளராக சந்திரசேகர் செயல்பட்டுருக்கிறார். கதை திரைக்கதை வசனம் எல்லாமே வி.பி.விஜி. 
சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரசிகர்கள் அனைவரும் மிகுந்து எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... 


Advertisement