தமிழக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்!

தமிழக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்!



actor-visu-died

சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

 தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகர் விசு உடல்நலக்  குறைவால் காலமானார். விசு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகராகவும் திகழ்ந்தவர்.

இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சின்ன கதாபாத்திரங்களில் நடித்த விசு பின்னர் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

visu

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.