டும் டும் டும்... காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் வினய்... மணப்பெண் யார் தெரியுமா.?

டும் டும் டும்... காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் வினய்... மணப்பெண் யார் தெரியுமா.?



Actor vinay getting married to actress vamala soon

தமிழில் உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து ஜெயம் கொண்டான்,மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும், எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

ஹீரோவுக்கு வரவேற்பு இல்லாததை அடுத்து வில்லனாக புதிய அவதாரம் எடுத்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க துவங்கினார்.

Vinay

இந்நிலையில் நடிகர் வினய் கடந்த சில ஆண்டுகளாக நடிகை நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். அவருடன் மாலத்தீவுகள் உட்பட பல்வேறு விடுமுறையை அனுபவிக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

வினய் மற்றும் விமலா விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். நடிகை விமலா தமிழில் சேரனின் ராமன் தேடிய சீதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.