"118 நாட்கள்., கனவை நனவாக்கிய ரஞ்சித்" - சியான் விக்ரம் உளம் மகிழ்ந்து டுவீட்.! நிறைவடைந்தது தங்கலான் படப்பிடிப்பு..!!

"118 நாட்கள்., கனவை நனவாக்கிய ரஞ்சித்" - சியான் விக்ரம் உளம் மகிழ்ந்து டுவீட்.! நிறைவடைந்தது தங்கலான் படப்பிடிப்பு..!!


Actor Vikram tweet

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் எந்த விதமான முன் அனுபவமும் இன்றி திரையுலகுக்குள் நுழைந்து பின்னர் தனது உழைப்பினால் படிப்படியாக முன்னேறியவர் ஆவார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கேஜிஎபில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். 

cinema news

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து முடிந்த நிலையில், படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு காயமும் ஏற்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் தெரிவித்துள்ள தகவலாவது, "படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. அற்புதமான பயணம் இது. 

அற்புதமான நடிகர்களுடன் பணிபுரிந்ததில் ஒரு நல்ல நடிகராக அனுபவங்களை நான் கற்றுக் கொண்டேன். 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. எங்களை இந்த கனவில் வாழவைத்த இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.