விபத்தில் சிக்கிய நடிகர் விக்ரமின் மகன், சுக்குநூறாகி ஏற்பட்ட பெரும் பாதிப்பு, அதிர்ச்சியில் திரையுலகினர்.!



actor-vikram-son-car-struggled-in-accident

விக்ரம் மகன் துருவ் விக்ரம் சென்ற கார் விபத்தில் சிக்கி 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ’சீயான்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவருக்கு துருவ் என்ற மகனும், அக்‌ஷிதா என்ற மகளும் இருக்கின்றனர். 

விக்ரமின் மகன் துருவ் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர்.மேலும் அவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான வர்மாவில் நடித்து வருகிறார் .இப்படத்தை பாலா இயக்குகிறார்.

    vikram

இதையடுத்து நடனத்தை மையமாகக் கொண்ட இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் துருவ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை அருகே போலீஸ் கமிஷனர் இல்லம் அருகே  துருவ் விக்ரம் தனது இரு நண்பர்களுடன் காரில் சென்ற போது,திடீரென கார் விபத்து ஏற்பட்டது.   

     vikram

இதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன.மேலும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, துருவ் விக்ரம் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.