BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
விக்ரம் தான் நம்பர் 1 ; அணைத்து பிரபலங்களையும் பின்னுக்கு தள்ளிய சியான்
கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.

பல இடங்களில் வெள்ளம் நீரில் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.
10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர் இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கேரளா மழை வெள்ளத்துக்கு பல சினிமாத்துறை பிரபலங்கள் நிவாரண தொகையை அளித்துவருகின்றனர். இதுவரை நிவாரண தொகை அளித்த தமிழ் நடிகர்களில் நடிகர் விக்ரம் தான் அதிக பணம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா தத்தளித்து வரும் நிலையில் பல்வேறு விதத்தில் கேரள மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பலர் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக நடிகர் விக்ரம் ரூபாய் 35 லட்சம் கொடுத்துள்ளார். அரசியலுக்கு வர துடிக்கும் ரஜினிகாந்த் 15 லட்சமும், கமல்ஹாசன் 25 லட்சமும், கொடுத்துள்ளனர். சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்சமும் கொடுத்துள்ளனர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25 லட்சமும், தனுஷ் 15 லட்சமும், சித்தார்த் 10 லட்சமும், நயன்தாரா 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக வரத்துடிக்கும் சினிமா பிரபலங்களை தாண்டி நடிகர் விக்ரம் அதிக அளவு நிவாரண உதவி அளித்துள்ளார்.