சினிமா

விஜயகாந்த் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படம்.. இயக்குனர் யார் தெரியுமா?.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Summary:

விஜயகாந்த் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படம்.. இயக்குனர் யார் தெரியுமா?.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

நடிகர் விஜயகாந்தும் - சரத்குமாரும் இணைந்து இயக்குனர் விஜய் மில்டனின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகராக இருந்து vanthavar நடிகர் விஜயகாந்த். நடிப்பிலும் சரி, அன்பிலும் சரி, அநியாயத்தை பார்க்கும் போது கோவத்திலும் சரி மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்ளும், பண்பான மனிதராக விஜயகாந்த் இருந்து வந்தார். 

அரசியலில் விஜயகாந்துக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி முதலில் கிடைத்து, பிற்காலங்களில் அது சிதைந்துபோய் இருந்தாலும், மக்களில் பெரும்பாலானோர் அதனை இன்று உணர்ந்துவிட்டார்கள். 

உடல்நிலை காரணமாக வீட்டிலேயே இருக்கும் விஜயகாந்த், அவ்வப்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடத்தப்படும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். தான் கட்சி கூட்டங்களில் இல்லாத குறையை தீர்க்க, அவரது மகனையும் அரசியலில் களமிறக்கி விட்டுள்ளார். 

அரசியலில் களமிறங்கியதில் இருந்து திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்த விஜயகாந்த், தற்போது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில், நடிகர் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சரத் குமார் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், இந்த தகவல் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. இந்த விஷயம் உண்மையாக இருக்க வேண்டும் என்றும், கேப்டனை திரையில் ஒரு முறை பார்க்க வேண்டும் என்றும் அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement