13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
நடிகர் விஜய்யின் மனைவியை சந்தித்த பிரபல நடிகை! அட.. யார்னு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்கள், அவரது பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்கள் போல கொண்டாடுவர்.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து தளபதி 66வது படத்திற்கான தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. விஜய் கடந்த 1999-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
சங்கீதாவை பொதுவாக நடிகர் விஜய்யின் பட விழாக்களை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் அதிக அளவில் காண இயலாது. இந்த நிலையில் அவரை அண்மையில் பிரபல நடிகை சங்கீதா சந்தித்துள்ளார். அப்பொழுது இருவரும் எடுத்துகொண்ட புகைப்படத்தை நடிகை சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.