தோசை சுட்டு கொடுத்த தளபதி விஜய்! செம சர்ப்ரைசில் தொகுப்பாளினி! வைரலாகும் யாரும் கண்டிராத அரிய வீடியோ!!actor-vijay-unseen-throwback-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் தளபதியாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். அவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார்  இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தளபதி விஜய்யின் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும். மேலும் அதனை ரசிகர்கள் வைரலாக்குவர். இந்த நிலையில் தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தொகுப்பாளர்களுக்காக தோசை சுட்டுள்ளார். அந்த அரிய வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.