#VijayWithSister: மறைந்த தங்கையுடன் அண்ணன் விஜய் மலர்தூவி பிரார்த்தனை.. அரிய வீடியோ வைரல்..!!

#VijayWithSister: மறைந்த தங்கையுடன் அண்ணன் விஜய் மலர்தூவி பிரார்த்தனை.. அரிய வீடியோ வைரல்..!!



actor-vijay-sister-video-trending

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்தான் தளபதி விஜய். இவர் நடித்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

actor vijay

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், அடுத்த அப்டேட்ற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

actor vijay

இந்த நிலையில் தளபதி விஜய் சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி பிரார்த்தனை செய்த அரிய வீடியோ  இணையத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.