சினிமா

மாபெரும் வெற்றிப்படத்திற்கு நோ சொன்ன நடிகர் விஜய்! என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Summary:

Actor vijay said no to genius movie

தமிழ் சினிமாவின் தளபதி, மாஸ் ஹீரோ என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்க்கார் படத்தின் டீசர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் சர்க்கார் படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பொதுவாக நடிகர்கள் படைத்திருக்கான கதையை தேர்வு செய்யும்போது கதை நல்லா இருகுகிறதா என்பதை எந்த அளவிற்கு பார்க்கிறார்களோ அதே அளவிற்கு அந்த கதையை தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் தெரிந்துகொண்டுதான் அந்த கதையை தேர்வு செய்கிறார்கள்.

அந்த வகையில் தனது ரசிகர்களுக்குகாக ஒரு கதையை வேண்டாம் என சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜீனியஸ். இந்த படத்திற்கான கதையை இயக்கினார் சுசீந்திரன் நடிகர் விஜயிடம்தான் கூறினாராம். படத்தின் கதை மிகவும் அருமை, தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆனால் படத்தின் கதாநாயகன் மனநிலை சரி இல்லாதவராக வருவதால் அதை தந்து ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை மனதில் வைத்து கதைக்கு நோ சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய். தனது ரசிகர்களுக்காக விஜய் செய்த காரியம் மிகவும் நெகிழ்ச்சியக்கா உள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.


Advertisement