ஒவ்வொரு தளபதி ரசிகனும் பெருமைப்பட வேண்டிய நேரம்! ஏன் தெரியுமா?

ஒவ்வொரு தளபதி ரசிகனும் பெருமைப்பட வேண்டிய நேரம்! ஏன் தெரியுமா?


Actor vijay received best international actor award from IARA

தெறி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். உலக அளவில் மாபெரும் சாதனை படைத்தது மெர்சல் திரைப்படம். இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சர்வேத கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிரிஅடுத் IARA என்ற அமைப்பு. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

vijay

மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதுக்காக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்படுவதாக இறை அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இப்போது இந்த விருதை இங்கிலாந்து சென்று பெற்றுள்ளார் நடிகர் விஜய். கோட் சூட்டுடன் விருது வாங்கிய தளபதி விஜய்யை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது IARA.