இளையதளபதி இவரை மட்டும் தான் மிகவும் நம்புவாராம்....! யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.!?actor-vijay-only-believe-his-manager

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பல திரைப்படங்களில் நடித்து தற்போது கோடியில் சம்பளம் வாங்குவதற்கு அவரின் திறமை காரணம் என்றாலும், ஆரம்ப காலகட்டத்தில் இவரின் தந்தையே இவருக்கு கைகொடுத்தார். 1984ஆம் வருடம் இவர் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

vijay

மேலும், 1995 ஆம் வருடம் வரை பத்து ஆண்டுகளாக தந்தையின் இயக்கத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இதன்பின் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' திரைப்படம் தான் விஜயின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.

இதனையடுத்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய விஜய், பல வெற்றி படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அளித்துவருகிறார். மேலும் இவரை ரசிகர்கள் 'இளைய தளபதி' என்று பெயர் சூட்டி அன்போடு அழைத்து வருகின்றனர்.

vijay

இதுபோன்ற நிலையில், விஜய் தனது குடும்பத்தை விட லலித் மற்றும் தற்போது இருக்கும் மேனஜர் இவர்கள் இருவரையும் தான் அதிகம் நம்புகிறாராம். விஜயின் சொத்திற்கு பினாமியாக லலித் தான் இருந்து வருகிறாராம். தான் எந்த கதையை தேர்வு செய்தாலும் இவர்களை கேட்டு கொண்டு தான் ஒகே சொல்கிறாராம். இதனால் அவரின் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.