அரசியலில் நடிகர் விஜய் களமிறங்குவது உறுதி? - விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் பின்னணி என்ன?.!Actor vijay may enter Politics 

 

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தொடர் வெற்றிகளால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் முக்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

அவர் தொடர்ந்து திரைஉலகிலேயே பயணிக்காமல், அவ்வப்போது தனது ரசிகர் மன்றம் சார்பில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வந்தார். சமீபத்தில் 234 தொகுதிகளிலும் கல்வி அளவில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கினார். 

cinema

அப்போது சில அரசியல் கருத்துக்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடக்கூடாது என வலியுறுத்துமாறும் கூறி இருந்தார். அவர் அவ்வப்போது தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார். இது அவரின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக சுட்டி காண்பித்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அவர் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டு முழுநேர அரசியலில் களமிறங்க வாய்ப்பிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், விஐய் அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அவை உறுதி செய்யப்படும்.