இந்தியா சினிமா

கேரளா வெள்ளநிவாரணம்! மாஸ்டர் பிளான் போடும் இளைய தளபதி விஜய்!

Summary:

Actor vijay master mind for kerala flood relief fund

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

உலகின் பல மூலைகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரணங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், தளபதி விஜய் தனது பங்கிற்கு தனது ரசிகர் மன்றம் மூலமாக 70 லட்சம் ருபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களிலிருந்து 15 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கேரளத்திற்கு கொண்டு சேர்க்கபடுகிறது. இது அத்தைனையும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நேரடியாக கண்காணிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement