அட.. நடிகர் விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா? அதுவும் இந்த மாதிரியான கதையா? மாஸ் தகவலால் செம குஷியில் ரசிகர்கள்!actor vijay going to act in pa ranjith movie

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் விஜய் ஹீரோவாக நடிக்கத் துவங்கி நேற்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

vijay

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்துவரும் நிலையில், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் விஜய்யிடம் கதை கூறியுள்ளதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அது சூப்பர் ஹீரோ கதை எனவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.