20 புதிய இசையமைப்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ள விஜய் ஆண்டனி; மாஸ் அப்டேட்.!Actor Vijay Antony about 20 new Music Directors 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து, நான் திரைப்படம் மூலமாக திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். 

தற்போது வரை பல படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில், தற்போது ஜூலை 21 ஆம் தேதி இவரின் நடிப்பில் உருவாகிய கொலை திரைப்படம் வெளியாகிறது. 

vijay antony

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, "தனது இசையமைப்பு பணிகளுக்கு சிறிது இடைவெளி விட்டு இருக்கிறேன். 

நான் படத்தை இயக்கும் இயக்குனர்கள் முன்பு களிமண்ணாக சென்று இருப்பேன். அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை செய்வேன். எனது திரையுலக வாழ்க்கை முடிவதற்கு முன்னால், குறைந்தபட்சமாக 20 இசையமைப்பாளர்கள் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்படுவார்கள்" என கூறினார்.