ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லை..! ரயில் நிலையத்தில் வேலைபார்த்த நடிகர் வையாபுரி..! அதிர்ச்சி செய்தி..!actor-vaiyapuri-early-life-story

தமிழ் சினிமவில் பிரபாலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வையாபுரி. கருத்தம்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவ்வை சண்முகி, ஜெமினி போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த இவருக்கு முதலில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக, சுமாரான தோற்றம் போன்ற காரணங்களால் இவர் ஒதுக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் சர்வராக வேலைபார்த்துவந்துள்ளார் நடிகர் வையாபுரி.

Vaiyapuri

அதன்பிறகுதான் தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதனை அடுத்து உடன்பிறப்பு, கருத்தம்மா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிக்ரு பிரபலமானார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகர் வையாபுரி.