'தளபதி 68' திரைப்படம் வேற மாறி இருக்கும் - நடிகர் வைபவ்.!

'தளபதி 68' திரைப்படம் வேற மாறி இருக்கும் - நடிகர் வைபவ்.!



Actor vaibhav speech about thalapathi 68

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்க,  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Thalapathi 68

மேலும், இந்த படத்தில் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்து பகுதிகளில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், பாடல்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathi 68Thalapathi 68

இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வைபவ் தளபதி 68 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில், "தளபதி 68 படத்தின் முதல் பாடலை கேட்டேன். யுவன் சங்கர் ராஜா வேற மாதிரி இசையமைத்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு பக்கம் ஆக்சன் படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்