அடச்சே.. கோவிலுக்கு போகும்போது கூட இப்படி ஒரு உடையா?.. நடிகை தமன்னாவால் முகம்சுளித்த நெட்டிசன்கள்..! 

அடச்சே.. கோவிலுக்கு போகும்போது கூட இப்படி ஒரு உடையா?.. நடிகை தமன்னாவால் முகம்சுளித்த நெட்டிசன்கள்..! 


actor thamanna glamour saree

சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார். தற்போது ஹிந்தியில் சில படங்களில் இவர் நடித்து வரும் நிலையில், ரசிகர்களை கவர்வதற்காக விழாக்களில் கலந்துகொள்ளும்போது கிளாமரான உடையணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

ஆனால் சிலநேரங்களில் அளவுக்கு அதிகமாக கிளாமரான உடையில் வருவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போது தமன்னா மலையாளத்தில் களமிறங்கிய நிலையில், அவர் நடிகர் திலீப்புக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் இருக்கும் மகாகணபதி கோவிலில் நடைபெற்றது. அப்போது பூஜைக்கு தமன்னா அணிந்துவந்த சேலை தான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. அத்துடன்  விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.