அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"அவங்க தான் எல்லாமே., அவங்க இல்லாம நாங்க இல்லவே இல்லை" - மனம் திறந்த சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!! உருகிப்போன ரசிகர்கள்..!!
நடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் "விருமன்". இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சூரி, கருணாஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகி வருமானரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விருமன் படவெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் அதிதி சங்கர், கார்த்திக், சூர்யா மற்றும் படகுழுவினர் பலரும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது, "எங்களுக்கு பின் இருக்கும் பெரியபலம் எங்கள் வீட்டின் பெண்கள் தான். அவர்களின் தியாகம் மிகப்பெரியது. ஒரு ஆண் இங்கே வெற்றிபெறுவது எளிது. ஆனால் ஒரு பெண் வெற்றிப்பெற பத்து மடங்காவது போராட வேண்டியிருக்கிறது.
தற்போது என் தங்கை கூறியது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. 'எங்களுக்கு சொர்க்கம் என்றால் நாங்கள் சாப்பிட்ட தட்டை மற்றொருவர் கழுவுவது தான்' என்று சொன்னார். ஒவ்வொரு முறையும் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்" என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.