புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
ஒளிப்பதிவாளர் வெற்றியின் மிகப்பெரிய அர்ப்பணிப்பு படைப்பாக கங்குவா வந்துள்ளது என சூர்யா பெருமிதம் சூட்டினார்.
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, பாபி உட்பட பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா (Kanguva). படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் எடிட்டிங்கில், மதன் கார்க்கி வசனத்தில் படம் தயாராகி இருக்கிறது.
இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா
ஆயிரத்தில் ஒருவன் போல, பழங்கால தமிழரின் கதையை கொண்டு தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் ரூ.250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் நவம்பர் 10 அன்று திரையரங்கில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல உலக மொழிகளிலும் கங்குவா வெளியாகிறது. தமிழ் மொழியில் வெளியான படங்களில், வெளியீடுக்கு முன்னரே சேட்லைட், ஓடிடி என மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்துள்ளது.
பேசுபொருளாகப்போகும் கங்குவா
இந்நிலையில், கங்குவா திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா டிரைலர் வெளியீடு விழாவில் பேசியபோது, "கங்குவா படத்தின் வெளியீடுக்கு பின், அதனை வாயைப்பிளந்து பார்க்க போகிறார்கள், ராஜமௌலி பாகுபலி எடுத்தார். தமிழ் சினிமாவிலும் இவ்வாறு செய்வார்கள் என மிகப்பெரிய பெயரை கங்குவா ஏற்படுத்தும்.
அதனை நான் அடக்கமாகவே இங்கு பதிவு செய்கிறேன். வெற்றியின் ஒளிப்பதிவு எப்படி சாத்தியமானது என கேட்கப்போகிறார்கள். ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும். மலையாளம் சினிமாவில் நேரம் கம்மியாக இருந்தாலும், படத்தை தரமாக கொடுப்பார்கள். இன்று நாம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைப்போம். கட்டாயம் அது நடக்கும்" என பேசினார்.
He has clearly mentioned that everyone will be impressed by DOP Vetri's work in #Kanguva. As usual, the media manipulated #Suriya's speech 😉pic.twitter.com/tdDa8ojBPS
— Kolly Corner (@kollycorner) November 7, 2024
இதையும் படிங்க: தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!