"நோ! அந்த நடிகருடன் நடிக்க கூடாது" என்று கண்டிஷன் போட்ட சூர்யா! உதறி தள்ளிய ஜோதிகா!actor-suriya-condition-to-jothika-to-not-act-with-this

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து குஷி, தெனாலி, காக்க காக்க எனத் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

jothika

2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதனைத் தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பு போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். இவரும் நடிகர் சூர்யாவும் நீண்ட நாட்கள் காதலித்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.  காதலிக்கும் நாட்களின் போதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்பதை சூர்யாவிடம் கேட்டுத்தான் செய்வாராம் ஜோதிகா.

தற்போது அதனைப் பற்றிய ஒரு செய்தி  வெளியாகி தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த இளம் நடிகருடன் நடிப்பதற்கு ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் சூர்யா அந்த நடிகருடன் நடிக்க வேண்டாம் என ஸ்ட்ரிக்டாக சொல்லியதால் ஜோதிகா அந்த வாய்ப்பை உதறி தள்ளியிருக்கிறார்.

jothika'யாரடி நீ மோகினி' திரைப்படம் தனுஷ் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜோதிகாவிற்கு தான் முதலில் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் சூர்யா தனுஷுடன் நடிக்க கூடாது என கண்டிப்பாக ஜோதிகாவிடம் சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் ஜோதிகா. தனுஷுடன் நடிக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் சரிவதாலும் மேலும் அவர்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதால் இந்த கண்டிசனை சூர்யா போட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.