காந்த பார்வையுடன் கருப்புநிற உடையில் பிக்பாஸ் சுஜாவின் புகைப்படம் இதோ!

நடிகை சுஜாவருணி  வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.


actor-sujavarunee-latest-photo

நடிகை சுஜாவருணி  வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகள் ஒருவர் சுஜாவருணி. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் சுஜா. இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் படங்களில் வரும் பாடலுக்கு நடனம் ஆடும் இவர் தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தியும் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்து பலரின் கவனத்திற்கு வந்தார். அவர் இந்த போட்டியின் இறுதி வரை செல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவருடைய போராட்டம் ரசிக்கும் வகையில் இருந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மக்களிடம் அதிகம் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் திலகம் சிவாஜியின் மகனுமான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவருக்கு ஆகஸ்ட் மாதம் ஆண்  குழந்தை ஒன்று பிறந்தது.

தற்போது சமூகவலைத்தளகளில் பிஸியாக இருக்கும் அவர் வித்தியாசமான ஹேர் ஸ்டைளுடன், காந்த பார்வை கொண்ட கருப்பு நிற உடையில் செம கலக்கல் போஸ் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டுளார். அந்த புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.