சினிமா

உண்மையிலேயே அந்த படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கணும்! பிரபல முன்னணி நடிகர் ஓபன்டாக்!!

Summary:

சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்க வேண்டும் என நடி

சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்க வேண்டும் என நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து பெருமளவில் ஹிட்டான திரைப்படம் சூரரைப்போற்று. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவானது. இதில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல தரப்பினர் மத்தியிலும் இப்படத்திற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. மேலும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகவில்லை.

இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப் அளித்த பேட்டியில், நான் கடைசியாக ஓ.டி.டி.யில் சூரரைப் போற்று படத்தை பார்த்தேன்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படத்திற்காக சூர்யாவிற்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்க வேண்டும். அந்தப் படத்தில் சூர்யா பிழையில்லா நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் ஹீரோவை கொண்டாடும் படம் கிடையாது. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்கு, அதில் நடிக்க முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும் என கூறியுள்ளார்


Advertisement