தற்கொலை முயற்சி செய்த பிரபல இளம் நடிகையை விரைந்து காப்பாற்றிய நடிகர் சுதீப்! வைரலாகும் உருக்கமான பதிவு!

தற்கொலை முயற்சி செய்த பிரபல இளம் நடிகையை விரைந்து காப்பாற்றிய நடிகர் சுதீப்! வைரலாகும் உருக்கமான பதிவு!


actor-sudeep-save-actress-jayasri-ramaiah-from-suicide

கன்னட சினிமாவில் கொத்திலா, உப்புகுலி காரா ஆகிய படங்களில் நடித்து, தற்போது வளர்ந்து வரும் இளம் நாயகியாக இருப்பவர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா .அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை  ஜெயஸ்ரீ ராமையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மிகுந்த மனசோர்வில் உள்ளேன். இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட  அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட அவரை காப்பாற்ற பலரும் முயன்றதாக கூறப்படுகிறது.

Sudeep

பின்னர் அவரே மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில்,  நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன். அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று அறிவித்திருந்தார். மேலும் முந்தைய பதிவையும் நீக்கியிருந்தார்.

இந்நிலையில் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்த அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். அதனை தொடர்ந்து நடிகை ஜெயஸ்ரீ ராமையா சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சுதீப் சார். நீங்கள்  உங்கள் குழுவினருடன் சேர்ந்து என்னை காப்பாற்றுனீர்கள். என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உங்களை அதிகம் பிடிக்கும். உங்களை பீதி அடையச் செய்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டேன். எனக்கு ஆதரவாக பேசிய மீடியாவுக்கும் என் நன்றி. உங்களுக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என  தெரிவித்துள்ளார்.

Sudeep